Categories: Entertainment News latest news

இந்தியன் 3 யாருக்காக இல்லையோ இவங்களுக்காக பார்க்கலாம்!.. இப்பவும் கண்டாங்கி சேலை கொல்லுதே!..

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்று குடும்பப் பெண்ணாகவே மாறிவிட்ட நிலையில், சினிமாவை விட்டு முற்றிலும் விலகி விடுவாரோ என அச்சம் கொண்ட ரசிகர்களுக்கு இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் எடுக்க ஆரம்பித்த நிலையில், காஜல் அகர்வால் அதில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

கடைசி வரை காஜல் அகர்வால் இந்தியன் 2வில் இருக்கிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஏமாந்துடாதீங்க என கடைசியாக அவர் இந்தியன் 3 படத்தில் நடிக்கிறார் என்பதை ஷங்கர் போட்டு உடைத்து விட்டார்.

 

கடைசியாக பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தில் பாலய்யாவே காஜல் அகர்வாலை ஆன்ட்டி என அழைப்பது எல்லாம் பார்த்து அவ்வளவு தான் காஜல் அகர்வால் மார்க்கெட் காலி என நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

 

அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக கஷ்டப்பட்டு ஜிம்மில் வொர்க்கவுட் செய்து தற்போது சூப்பர் ஸ்லிம்மாகவும் கவர்ச்சி பொங்கவும் மாறியுள்ளார் காஜல் அகர்வால். தற்போது அவர் மொத்த அழகையும் காட்டி வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

 

இந்தியன் தாத்தாவுக்கே அம்மாவாக காஜல் அகர்வால் இந்தியன் 3 படத்தில் நடித்துள்ளார் என்பது இந்தியன் 3 டிரெய்லரில் காண்பித்து இருந்தனர். குதிரையில் வரும் காஜல் அகர்வால் கலரி சண்டை எல்லாம் கமலுடன் செய்கிறார். இன்னும் என்ன என்ன சண்டை எல்லாம் போட்டிருப்பார் என்பது படம் வந்தால் தான் தெரியும்.

 

காஜல் அகர்வாலுடன் ஜோடி போட்டு நடித்த நிலையில், தான் கமலுக்கு இந்தியன் 2வை விட இந்தியன் 3 பிடித்திருக்கிறது என கலாய்க்கின்றனர். யாருக்காக இல்லையென்றாலும், காஜலுக்காக இந்தியன் 3வை பார்ப்போம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

 

 

Published by
Saranya M