கைமாறிய இந்தியன் 3... கமல் சிம்புவுடன் கடும் மோதல்... வேண்டாம் என்று சொல்லியும் தேடி வந்த பிலிம்பேர்..!
இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் போனது. இதற்குக் காரணம் அனிருத் மியூசிக், படத்தின் நீளம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இந்தப் படம் இந்தியன் 3க்கு ஒரு பெரிய லீடைக் கொடுத்துள்ளது.
அது மட்டும் தான் பிளஸ் பாயிண்ட். ரசிகர்கள் மத்தியில் இந்தியன் 2க்கு கிடைத்த ரிசல்டைப் பார்த்ததும் கமல் இந்தியன் 3 படத்திற்கு மிகவும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
இந்தியன் 3 க்கு கமல் மீண்டம் 10 நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.தற்போது எடுக்கப் போகும் 10 நாள் சூட்டிங்கிற்கான செலவை கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி அந்தப் படம். ரெட் ஜெயண்ட், லைக்கா நிறுவனங்களுக்குள் போகாமல் இந்தப் படம் வளர்ந்து வருகிறதாம். ராஜ் கமல் பிலிம்ஸ் படத்தைக் கையில் எடுக்கப் போவதாகவும் தகவல்கள் வந்து கொண்டுள்ளதாம். அதனால் இந்தப் படம் அப்படி சென்றால் வேற லெவலுக்குச் சென்று விடுமாம்.ஏற்கனவே இந்தியன் 2 படத்திலேயே இந்தியன் 3க்கான லீடு செம மாஸாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
தக் லைஃப் படம் ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து சென்னையில் சூட்டிங் ஆரம்பிக்கிறதாம். தொடர்ந்து அயர்லாந்துல படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். கிளைமாக்ஸ் செர்பியாவில் 4 நாள்கள் இருக்கிறது என மணிரத்னம் சொல்லி இருக்கிறாராம்.
கமலுக்கும், சிம்புவுக்கும் இடையேயான தெறிக்க விடும் சண்டைக்காட்சிகள் இங்கு தான் படமாக்கப்பட உள்ளதாம். 21வது தடவை கமலுக்கு பிலிம்பேர் விருது கொடுக்கப் போகிறார்கள். 24 வருடம் கழித்து விக்ரம் படத்துக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது.
கமல் ஏற்கனவே எனக்கு லட்டர் எழுதி இருந்தார். எனக்கு இனி அவார்டு வேண்டாம் என்று. இது ஒரு கூஸ்பம்ப்ஸ் மூவ்மெண்ட் என்றே சொல்ல வேண்டும். பிலிம்பேர் நிறுவனத்திற்கு இது 68வது விருது. ஆனால் கமலே 21 விருதுகள் வாங்கி விட்டார் என்றால் அது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.