வேறலெவல் லுக்கில் உலக நாயகன்!.. இந்தியன் 3 கெட்டப் இதுதான்!.. லீக்கான டிரெய்லர் வீடியோ!...
லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம்தான் இந்தியன் 2. 1996ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக 28 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் 750 தியேட்டர்களிலும், உலகமெங்கும் 5 ஆயிரம் தியேட்டர்களிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது.
முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தியன் 2 படத்தில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் என பலரும் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை களையெடுக்கும் சேனாதிபதி இந்தியன் 2-வில் பேன் இண்டியா அளவில் இந்தியா முழுவதும் களையெடுக்கிறார்.
28 வருடங்கள் கழித்து 2ம் பாகம் வெளியானாலும் 3ம் பாகம் இன்னும் 6 மாதங்களில் வெளியாகவுள்ளது. இந்தியன் தாத்தா சேனாதிபதியுடைய அப்பாவின் வரலாறு, வெள்ளையர்களை எதிர்த்து அவர் போட்ட சண்டை என கதை போகிறது. இந்தியன் 2-வில் நடிக்க இந்தியன் 3-தான் காரணம் என கமலே சொல்லி இருக்கிறார் எனில் அது எப்படிப்பட்ட வேடம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
உண்மையில் இந்தியன் 3 எடுக்கும் எண்ணம் ஷங்கருக்கு இல்லை. ஆனால், இந்தியன் 2 எடுக்கும்போது கதை போன விதம் அடுத்த பாகத்திற்கு அவரை இழுத்து சென்றுவிட்டது என்றுதால் சொல்ல வேண்டும். இந்தியன் 2 வுக்கான கதைதான் இந்தியன் 3-ஆக மாறியது. அதன்பின் இந்தியன் 2-வுக்கு வேறு கதை எழுதி இயக்கினார் ஷங்கர் என சொல்கிறார்கள்.
லைக்கா நிறுவனம் அதிக பொருட்செலவில் இந்தியன் 2-வை உருவாக்கி இருக்கிறது. ஒருகட்டத்தில் நிதிநெருக்கடியை சமாளிக்க முடியாமல் லைக்கா திணறியபோது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்க முன் வந்தது. இதனால்தான் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 டேக் ஆப் ஆனது.
இந்தியன் 2 படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் இப்படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் சில காட்சிகளை முன்னோட்டமாக காட்டி இருக்கிறார்கள். இந்நிலையில், இது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருக்கிறது. காஜல் அகர்வாலும், கமலும் ஆக்ரோஷத்துடன் சண்டை போடும் காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கிறது.