இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஜனவரி 5ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது டி 20 போட்டி இந்தூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் இலங்கை பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க முடியாமல் தினறினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழ அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் நவ்தீப் சைனி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் 2 விக்கெட்ட்டும், ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், பூம்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் தவான் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ராகுல் 45 ரன்களிலும், தவான் 32 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களிலும் அவுட் ஆக கேப்டன் கோலி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…