ஒருநாள் போட்டியில் 2 ஹாட்ரிக் எடுத்த இந்திய வீரர்: விசாகப்பட்டினத்தில் சாதனை!

Published On: December 18, 2019
---Advertisement---

e070bb6938f0e3811096a00d43ea4c32

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சதம் அடித்தனர். இந்த நிலையில் 388 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகின்றது. சற்று முன் வரை அந்த அணி 35 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 15 ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் வெற்றிபெற 167 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதும் கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்றைய போட்டியின் 33வது ஓவரை வீச வந்த இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது. ஆனால் இந்த ஓவரின் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது ஆகிய மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக விழுந்தது. இதனையடுத்து குல்தீப் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இவரது பந்தில் ஹோல்டர், ஹோப் மற்றும் ஜோசப் ஆகிய மூவரும் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோர்களுக்கான ஒரு நாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை செய்துள்ள குல்தீப் யாதவ், தற்போது மீண்டும் ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார். இந்திய வீரர் ஒருவர் ஒரு நாள் போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் சாதனை செய்த ஒரே வீரர் இவர்தான் என்ற பெருமை குல்தீப் யாதவ்வுக்கு கிடைத்துள்ளது

Leave a Comment