More

பாகிஸ்தான் மக்களுக்கு நன்கொடை அளித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் – நெட்டிசன்கள் தாக்குதல்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானிலும் இப்போது கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி அந்நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய உதவி குறித்து டிவீட் செய்திருந்தார்.

Advertising
Advertising

அந்த டிவீட்டுக்கு இந்திய வீரர்கள் யுவ்ராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆதரவாகப் பதிவிட்டு அப்ரிடியின் ட்ரஸ்ட்டுக்கு நன்கொடை அளித்திருந்தனர். இந்திய மக்களுக்காக எந்த உதவியையும் செய்யாமல் பாகிஸ்தான் மக்களுக்காக அவர்கள் குரல் கொடுத்ததை அடுத்து நெட்டிசன்கள் அவர்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்களின் செயலில் எந்த தவறும் இல்லை என்றும் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. இது சம்மந்தமாக இரு தரப்பினரும் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts