இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து ; 3 பேர் பலி : இயக்குனர் ஷங்கர் காயம்

5b36fc06b8ed43c59b52de9a2869646e

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஒரு இடத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

9d392e2ff21fa32a15bc0cf7ade50cdb

இந்நிலையில், எதிர்பாராத விதமாக 150 அடி உயரத்திலிருந்து கிரேன் அறுந்து விழுந்தது. இதில், சங்கரின் உதவியாளர் மது, இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இயக்குனர் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories Uncategorized

Leave a Comment