அமெரிக்காவில் உள்ள பிரபல நடிகை வீட்டின் மீது குண்டு போடலாமே என ஈரானுக்கு விளையாட்டாக யோசனை கூறிய இந்தியர் ஒருவரின் வேலை பறி போயுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது
அமெரிக்காவில் பேராசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பேராசிரியர், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர்ச்சூழல் குறித்து தனது சமூக வலைதளங்களில் கூறியபோது ’ஈரானின் முக்கிய இடங்களை குறி பார்த்து தாக்கப் போவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அதேபோல் ஈரானும் சில முக்கிய இடங்களை குறி வைக்கலாமே. அதில் ஒன்று பிரபல நடிகை கிம் கர்தாஷியன் வீடு. கிம் கர்தர்ஷன் வீட்டின் மீது ஈரான் குண்டு போடலாமே என அவர் விளையாட்டாக ஒரு கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பணிபுரிந்த கல்லூரி நிர்வாகம் அவரை வேலையைவிட்டு நீக்கியது. இந்த கருத்து அமெரிக்காவின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் அவரது கருத்து அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அந்தப் பேராசிரியர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட போதிலும் மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அமரன் திரைப்படம்…
Lubber Pandhu: கடந்த…
Sun serials:…
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…