தமிழகம் வந்த இந்திய அணி  - களை கட்டும் சேப்பாக்கம் மைதானம் !

by adminram |

57d5c28594fd47677b9b773fd73ac6d7

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி சென்னை வந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி சென்னை வந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் வீரர்களும் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் இந்திய அணி பங்கேற்கும் போட்டி நடப்பதால் ரசிகர்கள் போட்டியைக் காண ஆர்வமாக உள்ளனர். டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

Next Story