இந்தியாவிலேயே முதன் முதலாக திருநங்கைகள் அடங்கிய கால்பந்து அணி மணிப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் மீதான் பார்வை இப்போது பொது சமூகத்தில் மாறியுள்ளது. அவர்களும் மைய நீரோட்டத்தில் கலக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக மணிப்பூரில் அரசு சாரா நிறுவனமான 'யா ஆல்' திருநங்கைகள் கொண்ட ஒரு கால்பந்து அணியை உருவாக்கியுள்ளது. அதில் 14 திருநங்கைகள் அடங்கியிருந்த நிலையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி 7 பேர் கொண்ட இரு அணிகளாக பிரிந்து நட்பு ரீதியிலானப் போட்டில் பங்கேற்றனர்.
இந்தியாவிலேயே முதன் முதலாக திருநங்கைகள் மட்டுமே கொண்ட அணியை உருவாக்கியுள்ள மணிப்பூர் மாநிலத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…