மேன் Vs வைல்ட் படப்பிடிப்பில் காயம்? – சென்னை திரும்பும் ரஜினி

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி நேற்று மைசூர் கிளம்பி சென்றார். மைசூர் அருகே உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் இந்த இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. ஏற்கனவே பிரதமர் மோடியை இயக்கிய பேர்கிரில்ஸ் இந்த ஆவணப்படத்தை இயக்கி வந்தார். பந்திபுர் தேசிய பூங்காவில் அவர் படப்பிடிப்பு குழுவுடன் நடந்து செல்லும் வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், இந்த படப்பிடிப்பின் போது கணுக்கால் மற்றும் தோல்பட்டையில் காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரஜினி சென்னை திரும்ப முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

Published by
adminram