More

இயக்குனர் பாலாவின் மிரட்டலான படங்கள்

இயக்குனர் பாலா ஒரு அற்புதமான டைரக்டர். இவர் நடிகர், நடிகையரிடமிருந்து தனக்கு எது தேவையோ அவ்வகையான நடிப்பை எப்பாடுபட்டாவது வாங்கி விடும் திறமைசாலி. அதற்காக நடிகர், நடிகையரிடமிருந்து அப்பா…ஆளை விட்டா போதும்டா சாமி…என புலம்பாத குறையாக நடிகர், நடிகையர் எப்போடா ஷ_ட்டிங் முடியும் என்ற நிலையில் தவிப்பர். இயக்குனர் பாலாவின் முதல் படம் ச்சீயான் விக்ரம் நடித்த சேது. இந்த படத்தின் வெற்றிக்குப் பின் பாலாவை சேது பாலா என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர். பி ஸ்டூடியோ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி விட்டார். 

இவர் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் நாராயணத்தேவன்பட்டியில் 11.7.1966ல் பிறந்தார்.  இவருக்கு முத்துமலர் என்ற ஒரே ஒரு மகள் உள்ளார். 

பாலா பழனிசாமி என்பது இவரது முழுப்பெயர். பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலையை பயின்றவர். 2003ல் இவர் இயக்கிய பிதாமகன் படத்திற்காக விக்ரம் தேசிய விருதைப் பெற்றுள்ளார். 2008ம் ஆண்டு இவர் இயக்கிய நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். இவர் இயக்கிய படங்களில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா என அனைத்துப் படங்களுமே மெஹா ஹிட் தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டியாக இருக்கும். 

பாலாவின் இயக்கத்தில் குறிப்பிட்டத்தக்க சில படங்களை இங்கு பார்க்கலாம். 

சேது 

ச்சீயான் விக்ரம் என்ற பெயர் இந்தப்படத்திலிருந்துதான் விக்ரமுக்கு வந்தது. அந்த அளவுக்கு படத்தில் விக்ரம் இருவேறு வேடங்களில் தன் அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருப்பார். அப்படிச் சொல்வதை விட அவரிடமிருந்து இயக்குனர் பாலா நடிப்பைக் கறந்திருப்பார் என்றே சொல்ல வேண்டும். இதில் மனநலம் பாதித்தவராக வரும் விக்ரம் வேற லெவலில் நடித்து தன் தனித்திறமையை வெளிக்காட்டியிருப்பார். 

இது விக்ரம் தானா என அச்சச்சோ என பரிதாபப்பட வைத்தது இந்த சேது கேரக்டர். இந்த அளவுக்கு யாராலும் நடிக்க முடியாதோ என்று கூட எண்ணத் தோன்றும். படத்தைப் பார்க்கும்போது நிஜத்தில் மனநோயாளியான ஒருவரைக் கண்டால் எப்படி இருக்குமோ அதே போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியிருப்பார் விக்ரம். இந்தப் படத்தை பார்த்ததும் முதல் காட்சியில் படத்தில் வரும் அதீத பரிதாபங்கள் மற்றும் சோகக்காட்சிகள் படத்தின் வெற்றியைப் பாதித்து விடும் என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு படத்திற்கு பிக் அப் கிடைக்க படம் சூப்பர் ஹிட் ஆனது. அது வரை விக்ரமுக்கு எந்தப் படங்களுமே பெயர் சொல்லும் படியாக அமையவில்லை. சேது படம் தான் விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்து பிரேக் கொடுத்தது. 

இருட்டிண்ட ஆத்மானு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்பு தான் சேது. இந்தப்படத்தில் விக்ரமுடன் அபிதா, சிவக்குமார், ஸ்ரீமன், மனோபாலா உள்பட பலர் நடித்தனர். இது ஒரு அதிரடி காதல் படம். படத்தின் இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவரது இசையில் படத்தில் அற்புதமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சேதுவுக்கு, வார்த்தைத் தவறி காதலென்ன காதலென்ன, சிக்காத சிட்டொன்று, எங்கே செல்லும் இந்தப் பாதை படத்தின் வெற்றிக்கு வழிகோலின. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் தேரே நாம் என்ற பெயரில் வெளியானது. இந்தப் படம் 2000ல் சிறந்த வட்டாரத் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. 

பிதா மகன் 

இந்தப்படத்தில் விக்ரம் ஒரு வெட்டியான் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். படத்தில் அவரது நடிப்பிற்கு ஈடு இணையே இல்லை எனலாம். இந்தப்படத்தில் சூர்யாவும் தன் பங்கிற்கு திறமையைக் காட்டி நடித்திருப்பார். படத்தின் பின்னணி இசையில் இசைஞானி மிரட்டியிருப்பாபார். இதில் சூர்யா ஒரு மெடிக்கல் ரெப்பாக வருவார்.

பிறையே, இளங்காத்து வீசுதே… அருணா ருணம், அடடா பாடல்கள் சூப்பர் ஹிட். அதிலும் இளங்காத்து வீசுதே பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.  

நந்தா 

ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம் தான் நந்தா. இப்படத்தில் சூர்யா, லைலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஓராயிரம் யானைக்கொன்றால்; பரணி, எங்கெங்கோ எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய், கள்ளி அடி கள்ளி, முன் பனியா என்னும் பாடல்கள் படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துசசெந்னன. சூர்யா, லைலா, ராஜ்கிரண், சரவணன், ராஜஸ்ரீ, கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். 
ஜெயகாந்தனோட நந்தவனத்தில் ஒரு ஆண்டி தான் பிதாமகன். கமல்ஹாசனின் அன்பே சிவம், ஜெயமோகனின் ஏழாம் உலகம், காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் என எல்லாம் சேர்ந்தது தான் நான் கடவுள்.

நான் கடவுள் 

Advertising
Advertising

இந்தப்படம் ஒரு விசித்திரமான அனுபவத்தைத் தரும். இதுவரை காசிக்குப் போகதவர்களும். அகோரியைப் பார்க்காதவர்களும் இப்படத்தில் வரும் அந்த சுகானுபவத்தை உணரலாம். அகோரியாக வரும் ஆர்யா படத்தில் மிரட்டியிருப்பார். இப்படத்திற்கான பின்னணி இசையை அமைத்தவர் இளையராஜா. ஓம் சிவோ ஹம்…, பிச்சை பாத்திரம், அம்மா உன் பிள்ளை, பிச்சைப்பாத்திரம், கண்ணில் பார்வை, மாதா உன் கோவில் பாடல்கள் அருமையிலும் அருமை. இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் வில்லனாக வந்து மிரட்டியிருப்பார். தற்போது இவர் நகைச்சுவை நாயகனாக மாறி விட்டார். 

அவன் இவன்  

2011ல் வெளியான இப்படத்தில் ஆர்யாவும், விஷாலும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தனர். 60வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான தேசிய விருது பூர்ணிமாவுக்குக் கிடைத்தது. ராசாத்தி, டியா டியா டோல், ஒரு மலையோரம், முதல் முறை,             

பரதேசி 

ரெட் டீ நாவலைத் தான் பரதேசி என்று ஒரு படத்துக்கான கதையை முடிவு செய்ததாக பாலா கூறுகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்தார். படத்தில் முரளி மகன் அதர்வா நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார். இப்படத்திற்கான பாடல்களில் அவ தான் பையா, செங்காத்தே, ஓர் மிருகம், தன்னைத் தானே, செந்நீர் தானா ஆகியவை இசைஞானியின் இசையில் நம்மை தாலாட்டும். படத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளிகள், முதலாளி வர்க்கத்தினரால் படும் அவஸ்தையைத் தோலுரித்துக் காட்டியிருப்பார் இயக்குனர் பாலா. 

 

Published by
adminram

Recent Posts