ஐபிஎல் உறுதி:இந்திய அணி சந்தேகம்தான்! –தோனியைப் பற்றி மனம் திறந்த சக வீரர் !

Published on: January 30, 2020
---Advertisement---

34bc83018e75c8291114dfb1841c3b1c

இந்திய அணியில் தோனி இனி விளையாடுவது கோலி எடுக்கும் முடிவில்தான் உள்ளது என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அவரது நட்புப் பட்டியலில் இருப்பவர் ரெய்னா. சென்னையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றி அவர் பேசியுள்ளார்.

அதில் ‘ தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என நினைத்திருந்தால் எப்போதோ சென்றிருப்பார். ஆனால் அவர் விளையாட் வேண்டும் என்ற ஆசையோடுதான் உள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் தயாராக உள்ளார். மார்ச் மாதம் முதல் அவர் பயிற்சிகளில் ஈடுபடுவார். ஆனால் இந்திய அணியில் அவர் மீண்டும் விளையாடுவது கோலி எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடாத தோனி டி 20 உலகக்கோப்பை போட்டியிலாவது விளையாடுவாரா என்ற கேள்வி தோனி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Leave a Comment