அமெரிக்க படைகள் மீது திருப்பி தாக்கிய ஈரான்: போர் மூளுமா?

1d67d496263a9c0431622602c24dc016

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ட்ரோன் படைகள் ஈரானில் தாக்குதல் நடத்தியதால் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இன்று அதிகாலை அமெரிக்க படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கிவிட்டது என்றே கருதப்படுகிறது

ஈராக்கில் உள்ள ஈராக்-அமெரிக்க கூட்டுப் பயிற்சி முகாமில் 12 ராக்கெட்டுகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரானின் இந்த தாக்குதலை அமெரிக்கா உறுதி செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஈரான் இராணுவத்தளபதி சுலைமானி படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதால் இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவின் பதிலடி எப்படி இருக்கும் என்பதே உலக நாடுகளின் அச்சமாக உள்ளது

அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ஈராக் என்பதால் இருக்கும் ஈரானுக்கு எதிராக ஈராக்கும் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா தற்போதைக்கு அமைதியாக இருந்தாலும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் பதிலடி தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

 

Related Articles

Next Story