இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா நிவாரணத்துக்காக ஒரு லட்ச ரூபாய் கொடுத்தது அவர் மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
கோவிட் 19 வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இன்று வரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேலும் வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் விதமாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து சினிமா பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் தங்களால் முடிந்த அளவு நிதியினை அளித்து வருகின்றனர். பிசிசிஐ தலைவர் கங்குலி 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி கொரோனா நிவாரண நிதியாக ஒரு தன்னார்வல நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாயை அளித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் ‘இவரின் சொத்து மதிப்பு 800 கோடி ரூபாய். ஆனால் அவர் கொரொனா நிவாரணத்துக்காக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.’ எனக் கூறி விமர்சனம் செய்துள்ளார்.
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…
Pushpa2: தென்னிந்தியா…