More

இந்த வயதில் இதெல்லாம் தேவையா? ஜாக்கி சானைத் திட்டும் ரசிகர்கள்!

ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஜாக்கி சான் படப்பிடிப்பின் போது படகில் இருந்து தவறி ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

தனது ஆக்‌ஷன் காமெடி படங்களின் மூலமாக உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள ஜாக்கி சான், இதுவரை எந்த வொரு படத்தின் ரிஸ்க்கான காட்சிக்கும் டூப் போட்டதில்லை என்ற பெருமைக்குரியவர். ஆனால் சமீபகாலமாக ஆக்‌ஷன் படங்கள் வேண்டாம் என ஒதுங்கி இருந்த அவர் வேன்கார்டு என்ற படத்தில் மீண்டும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கிறார்.

இந்த படத்துக்காக ஆற்றுக்குள் படகில் செல்லும் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்துள்ளது. அந்த காட்சியைப் படமாக்கிய போது ஜாக்கி சான் படகில் இருந்து தவறி ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். சில நிமிடங்களில் போராடி அவரைக் காப்பாற்றி உள்ளது படக்குழு. ஆனால் இந்த விபத்தால் படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இது சம்மந்தமான வீடியோ வெளியாக இந்த வயதில் இது போன்ற ரிஸ்க்கை ஜாக்கி சான் எடுக்கலாமா எனக் கோபத்தில் திட்டி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts