சினிமாவுக்கு மொத்தமாக முழுக்கு போடுகிறாரா அனுஷ்கா ? – ரசிகர்கள் அதிர்ச்சி!
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்த அனுஷ்கா சினிமாவை விட்டு முழுமையாக விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அனுஷ்கா, தனிக்கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்து வந்தார். அவர் பிரபாஸுடன் இணைந்து நடித்த பாகுபலி இரண்டு பாகங்களும் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களாக சாதனை புரிந்தன.
ஆனால் பாகுபலிக்குப் பின்னர் அவர் அதிகளவில் படங்களில் நடிக்கவில்லை. தற்போது நிசப்தம் எனும் படத்தில் மாதவனுடன் நடித்து வருகிறார். மேலும் அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அனுஷ்கா சினிமாவை விட்டு முழுமையாக விலக இருப்பதாகவும் அதனால்தான் புதிய படங்களில் நடிக்க ஒத்துக்கொள்வதில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது அவர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.