Connect with us

Cinema News

அல்லு அர்ஜூனுடன் பிரச்சனையா? புஷ்பா படத்தை பற்றி பேசி விமர்சனத்திற்கு ஆளான சித்தார்த்

அல்லு அர்ஜூன்: அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிக வேகமாக ₹1000 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. சமீபத்தில், சுகுமார் படம் குறித்த கருத்துக்காக சித்தார்த் விமர்சினத்திற்கு ஆளானார், கூட்டத்திற்கும் ஒரு படத்தின் தரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியது அல்லு அர்ஜுன் ரசிகர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பைப் பெற்றிருக்கிறார் சித்தார்த்.

சென்னையில் அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் மிஸ் யூ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ​​புஷ்பா 2 பற்றிய கருத்து தொடர்பாக அல்லு அர்ஜுனுடன் சித்தார்த்திற்கு ஏதேனும் ‘பிரச்சனை’ உள்ளதா என்று கேட்டபோது, ​​எனக்கு ‘பிரச்சினை’ என்ற வார்த்தையிலேயே சிக்கல் உள்ளது. மற்றும் நான் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை.

ஜேசிபியுடன் புஷ்பாவை ஒப்பிட்ட சித்தார்த்: புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள். படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அதன் இரண்டாம் பாகத்தைக் காண திரையரங்குகளுக்கு கூட்டம் வரும் என கூறியிருந்தார். பிரபல யூடியூபர் மதன் கௌரிக்கு அளித்த பேட்டியில் சித்தார்த், படத்தின் தரத்திற்கும் கூட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஜேசிபி கட்டுமானப் பணிகளைப் பார்க்கக் கூட்டம் கூடுகிறது அதை போலத்தான் என அவர் கூறியிருந்தார். இந்த கருத்துதான் இப்போது கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.

அல்லு அர்ஜுனின் மெகா எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2: தி ரூல் படத்திற்கு முன்பே சித்தார்த் நடித்த மிஸ் யூ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. படம் நவம்பர் 29 அன்று வெளியாக இருந்தது, ஆனால் இப்போது டிசம்பர் 13 க்கு தள்ளப்பட்டது. புஷ்பா 2: தி ரூல் என்பது சுகுமாரின் 2021 திரைப்படமான புஷ்பா: தி ரைஸின் இரண்டாம் பாகம்.

சித்தா: சித்தார்த்தை பொறுத்தவரைக்கும் எதையும் தெளிவாக பேசுவேன் என்ற பேர்வழியில் இந்த மாதிரி ஏதாவது சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம். இப்படி பல பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அவரின் நடிப்பில் கடைசியாக சித்தா திரைப்படம்தான் பெரிய ஹிட்டானது. இந்தியன் 2 திரைப்படம் சொல்லும் படியாக அமையவில்லை. அதனால் மிஸ் யூ படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் சித்தார்த்.

google news
Continue Reading

More in Cinema News

To Top