பிக்பாஸ் ரைசாவின் காதலன் பிரபல நடிகரா? பரபரப்பு வீடியோ

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் தனக்கு வெளியே ஒரு காதலன் இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு ரைசா வில்சன் தனது காதலர் யார்? என்பதை அறிவிக்கப் போவதாக ஜிவி பிரகாஷ் சற்றுமுன் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆனால் உண்மையில் ஜிவி பிரகாஷ் மற்றும் ரைசா வில்சன் இணைந்து ’காதலிக்க நேரமில்லை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்றும் இந்த படத்தில் தனக்கு காதலனாக ஜிவி பிரகாஷ் தான் என்ற அறிவிப்பை தான் ரைசா வில்சன் வெளியிடுவார் என்றும், ஜிவி பிரகாஷின் இந்த வீடியோ ’காதலிக்க நேரமில்லை’ படத்தின் விளம்பர வீடியோ என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஜிவி பிரகாஷ், ரைசா வில்சன் இணைந்து நடித்துவரும் இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram