More

ஹர்பஜன்சிங் ஜோடியாகிறாரா லாஸ்லியா?

பிக்பாஸ் லாஸ்லியா ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அந்த படத்தில் நாயகனாக ’மாயா’ பட நடிகர் ஆரி நடிக்கவிருப்பதாகவும் வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

Advertising
Advertising

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க இருக்கும் முதல் தமிழ் திரைப்படமான ‘பிரண்ட்ஷிப்’ என்ற படம் குறித்த அறிவிப்பு இன்று காலை வெளிவந்தது. இந்த படத்தில் நாயகியாகவும் லாஸ்லியா நடிக்க உள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து ஆரி நடிக்கும் ஒரு படம், ஹர்பஜன்சிங் நடிக்கும் ஒரு படம் என ஒரே நாளில் லாஸ்லியா நடிக்கும் இரண்டு திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளிவந்துள்ளதை அடுத்து லாஸ்லியா ஆர்மியினர் குஷியில் உள்ளனர். தற்போது லாஸ்லியா பெயர் டுவிட்டரில் தமிழக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஹர்பஜன்சிங், லாஸ்லியா நடிக்கவிருக்கும் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம் ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின்  என்பவர் இயக்கத்தில் ஷாம் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா என்பவர்கள் தயாரிப்பில் உருவாகவுள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Published by
adminram

Recent Posts