வளர்த்து விட்ட சுந்தர்.சி-யுடன் ஹிப் ஹாப் ஆதி மோதலா?

Published on: February 2, 2020
---Advertisement---

27d13434cdcf973f025b950dd6f96c2c

ஹிப் ஹாப் ஆதியைத் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்துவைத்து ஹீரோவாகவும் ஆக்கியவர் சுந்தர் சி. சுந்தர் சி இயக்கத்தில் உருவான ஆம்பள, அரண்மனை, அரண்மனை 2 உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் இசையமைத்தார்.

அதுமட்டுமில்லாமல் ஆதியை ஹீரோவாக வைத்து நட்பே துணை, மீசைய முறுக்கு மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் கடைசியாக உருவான நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது ஆதி சரியாக ஒத்துழைக்காததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் தான் இயக்க இருக்கும் அரண்மனை 3 படத்தில் இருந்து ஹிப் ஹாப் ஆதியைத் தூக்கிவிட்டு வேறொரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்ய இருக்கிறார் சுந்தர் சி.

Leave a Comment