சைக்கோ படம்  பார்த்து இளையராஜா திட்டினாரா? – மிஷ்கின் விளக்கம்

இந்நிலையில், இப்படம் தொடர்பாக பல கேள்விகளை விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.குறிப்பாக 24 கொலைகளை செய்யும் சைக்கோவை படத்தின் கதாநாயகி எப்படி குழந்தையாக பார்க்கிறார்? அவனை எப்படி மன்னிக்கலாம்? கொலை நடக்கும் ஒரு இடத்தில் கூட சிசிடிவி கேமரா இல்லையா என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இவை அனைத்திற்கும் மிஷ்கின் பதிலளித்துவிட்டார்.

மேலும், இப்படத்தை பார்த்த இளையராஜா படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் மிஷ்கினிடம் கோபப்பட்டதாகவும் செய்திகள் பரவியது. இதை மறுத்துள்ள மிஷ்கின் ‘ இளையராஜா சைக்கோ படத்திற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் இசையமைத்து கொடுத்தார். முழுபடத்தையும் பார்த்த அவர் என்னை மிகவும் பாராட்டினார்’ எனக்கூறியுள்ளார்.

Published by
adminram