நாட்டில் மூன்று முதல் நான்கு சதவீதம் பேர் மட்டும்தான் வருமானவரி செலுத்துவதாகவும் மற்றவர்கள் அனைவரும் அவர்களை சார்ந்த இருப்பதாகவும் நடிகை கங்கனா ரனவத் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத் பாஜக ஆதரவாளர் என்பது நாடறிந்த செய்தி. இந்த நிலையில் தற்போது அவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக பேசியுள்ளார். அவரது பேச்சில் ’போராட்டங்களின் போது முதல் விஷயமாக கடைப்பிடிக்க வேண்டியது வன்முறையின்மைதான். நமது மக்கள் தொகையில் 3 முதல் 4 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் மற்றவர்கள் அனைவரும் அந்த வரியை சார்ந்துள்ளனர். அதனால் போராட்டங்களின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
கங்கனா ரனாவத்தின் இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்ஸ் ’நாட்டில் வருமான வரி மட்டுமே மக்கள் செலுத்தும் வரி அல்ல. மற்ற வரிகளும் உள்ளன. ஏன் ஜி எஸ் டி இல்லையா ? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Biggboss Tamil:…
நடிகை நயன்தாரா…
Kamal: ரசிகர்கள்…
Biggboss Tamil:தமிழ்…
2017 மே…