More

’இந்தியன் 2’ படம் மீண்டும் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போதிலும் கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பில் கமலஹாசன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Advertising
Advertising

’இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன்  இரண்டு வேடத்தில் நடித்து வரும் நிலையில் அவர் இல்லாமலேயே இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடக்கிறது என்றால் அவருடைய கேரக்டர் படத்தில் எந்த அளவுக்கு இருக்கின்றது? என்ற சந்தேகம் தற்போது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் காலில் அறுவை சிகிச்சை செய்வதன் காரணமாக கமலஹாசன் ஓய்வு எடுப்பதால் ’இந்தியன் 2’படப்பிடிப்புக்கு கமல் செல்லவில்லை என்றுதான் இத்தனை நாட்களாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் செய்திகளின்படி கமல்ஹாசனுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே சின்ன உரசல் ஏற்பட்டு இருப்பதாகவும் இந்த உரசல் காரணமாகவே படப்பிடிப்பிற்கு செல்வதை கமலஹாசன் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் டிராப் ஆகுமோ என்ற சந்தேகம் கமல் ரசிகர்களுக்கு ஏற்பட்டு உள்ளது

இருப்பினும் டிராப் ஆகும் அளவுக்கு கமல் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே பெரிய பிரச்சினை இல்லை என்றும் அது பேசி சரிசெய்து விடப்படும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Published by
adminram

Recent Posts