More

ஒரு அதிபரின் மனைவியை சந்தித்தது குற்றமா? சிக்கலில் சூப்பர் ஸ்டார்!

நடிகர் அமீர்கான் தன் படத்தின் படப்பிடிப்புக்காக துருக்கி சென்ற போது அந்த நாட்டு அதிபரின் மனைவியை சந்தித்துள்ளார்.

Advertising
Advertising

ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ  ரீமேக்கான லால்சிங் சிட்டா எனும் படத்தில் அமீர்கான் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட முடிந்துவிட்ட  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக துருக்கியில் நடைபெற்று வருகிறது. இதற்காக துருக்கி சென்றுள்ள  ஆமிர்கான் மரியாதை நிமித்தமாக அமீர்கான்,  துருக்கி அதிபரின் மனைவியை அவரது இல்லத்தில் சந்தித்து உள்ளார்.

அவர்கள் இருவரும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அதிபரின் மனைவி. ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்த இந்தியாவைச் சேர்ந்த ரசிகர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமிர்கானுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் துருக்கி, பாகிஸ்தான் ஆதரவு நாடு என்பது மட்டுமே. ஆனால் இந்திய ஆதரவு நாடான இஸ்ரேலின் அதிபரை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் அமீர்கான் எனவும் சொல்லப்படுகிறது. அதனால் அமீர்கான் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என அவருக்கு எதிராக தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளன. ஆனால் ஒரு சிலரோ மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பை இப்படி அரசியலாக்குவது அநாகரிகமானது எனக் கூறியுள்ளனர்.

அமீர்கான், கொரோனா, படப்பிடிப்பு, துருக்கி, amirkhan, corona, shooting, turkey

Published by
adminram