சீமான் படம் போடாமல் பிரச்சாரம் செய்ததால் வெற்றியா? வைரலாகும் புகைப்படம்

நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரே ஒரு கவுன்சிலர் பதவியை மட்டும் கைப்பற்றியது என்று வெளியான் செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் சுனில் பெற்ற வெற்றியை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற நாம் தமிழர் கட்சியின் சுனில் பிரச்சாரத்தின்போது வெளியிட்ட போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் சீமான் புகைப்படமே இல்லை. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படமும், இயற்கை விவசாயி நம்மாழ்வார் படமும், திருவள்ளுவர் படமும் மட்டுமே உள்ளது.

இதனை வைத்து சீமான் படத்தை போட்டால் ஓட்டு கிடைக்காது என்று எண்ணியே சுனில் அவரது படத்தை இருட்டடிப்பு செய்துவிட்டதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது உண்மையா? என்பதை சுனில்தான் விளக்க வேண்டும்

Published by
adminram