‘வலிமை’ படத்தில் இருந்து ஜீடிவி விலகியது உண்மையா? பரபரப்பு தகவல்

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் அஜித்துக்கு வேண்டாத ஒரு சிலர் இந்த படத்தின் படப்பிடிப்பில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் போனி கபூருக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக வதந்தி கிளம்பினர்.

மேலும் இந்த படத்தை ஜீ டிவி மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்து உள்ள நிலையில் திடீரென ஜீ டிவி இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அதன்பின்னர் 3 விநியோகஸ்தர்களிடம் ரூபாய் 30 கோடி பெற்ற போனிகபூர் இந்த படத்தை சொந்தமாக தயாரித்து வருவதாகவும் கூறப்பட்டது

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்றும் ஜீடிவி இந்த படத்தில் இருந்து விலகவில்லை என்றும் ஜீடிவி மற்றும் போனிகபூர் இணைந்து தான் இந்த படத்தை தற்போது தயாரித்து வருவதாகவும் மேற்கண்ட வதந்திகள் அனைத்தும் ஆதாரம் இல்லாதவை என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது. மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram