லாஸ்லியா இரண்டாவது நாயகியா? பிரபல நடிகை இணைந்ததால் பரபரப்பு!

நடிகர் ஆரி நடிக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் லாஸ்யா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் முதன் முதலாக லாஸ்லியா நாயகியாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளதால் அவரது ஆர்மியினர் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி ஹர்பஜன்சிங் நடிக்கும் பிரெண்ட்ஷிப் என்ற படத்திலும் லாஸ்லியா தான் கதாநாயகி என நேற்று அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் இரண்டு திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு அவரது ஆர்மியர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஆரி, லாஸ்லியா நடிக்கும் படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே இணைந்துள்ளார். இவருக்கு இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டர் என்பதால் இவர் தான் இந்த படத்தின் நாயகி என்றும் லாஸ்லியா இரண்டாவது நாயகி என்றும் வதந்திகள் பரவி வருகிறது. இந்த வதந்தியால் லாஸ்லியாவின் ஆர்மியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இந்த படத்தின் நாயகி யார் இரண்டாவது நாயகி யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் லாஸ்லியா ஆர்மியினர் டுவிட்டர் இணையதளம் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Published by
adminram