’மதகஜராஜா 2’ தான் சர்வர் சுந்தரம் படமா? கோலிவுட்டில் பரபரப்பு!

இந்த படத்தை ரிலீஸ் செய்ய நடிகர் சங்க தலைவர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தும் விஷாலால் முடியவில்லை. காரணம் இந்த படத்தின் பட்ஜெட்டை விட இந்த படத்திற்காக வாங்கப்பட்ட கடன் அதிகம் என்றும் இந்த படத்தை ரிலீஸ் செய்து அதனால் கிடைக்கும் லாபத்தில் இந்த படத்தின் கடனை பாதியை கூட அடைக்க முடியாது என்று தெரிந்ததும் விஷால் இந்த படத்தின் ரிலீஸ் செய்யும் முடிவை கைவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இதே நிலைமைதான் கிட்டத்தட்ட சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தர’ம் திரைப்படத்துக்கு ஏற்பட்டு உள்ளதாக கோலிவுட் திரையுலகினர் கூறிவருகின்றனர். ’சர்வர் சுந்தரம்’ திரைப்படம் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி இருப்பதாகவும் இந்த படம் ரிலீஸை எதிர்த்து 47 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரிலீஸ் தேதி பல முறை அறிவித்த ’சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர் தற்போது மீண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். ஆனால் பிப்ரவரி 21ம் தேதியும் இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்றும் சந்தானத்திற்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதன் அதுமட்டுமின்றி ஒரு பகுதியின் விநியோக உரிமையை பலரிடம் விற்பனை செய்து முறையீடு செய்து உள்ளதாகவும் இதனால் இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்றும் கோலிவுட் திரையுலகினர் இடையே வதந்தி பரவி வருகிறது 

Published by
adminram