நகைச்சுவை நடிகர் சந்திரபாபு நினைவு நாளை முன்னிட்டு அவரது கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.
தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான கதை சொல்லல் பாணியால் கவனிக்கப்படுபவர் இயக்குனர் மிஷ்கின். அவர், தமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகரான சந்திரபாபுவின் தீவிரமான நடிகர். சந்திரபாபுவின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதை முன்னிட்டு இயக்குனர் மிஷ்கின் சென்னையில் உள்ள அவர் கல்லறைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது சம்மந்தமான புகைப்படங்களையும் இணையதளத்தில் பதிவேற்ற அது வைரலானது.
சந்திரபாபு குறித்து அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணலில் சந்திரபாபுவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. ’நல்ல ஐடியா. ஆனால் அதை படமா எடுக்க மாட்டேன். அவரோட வாழ்க்கையை சினிமாவா பார்க்குற எண்ணம் இல்லை. அவர் மிகப்பெரிய ஆளுமையா வாழ்ந்துட்டே இருப்பார்’ எனக் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமாரின்…
Jailer 2:…
RJ Balaji:…
ஒட்டுமொத்த இந்திய…
சொர்க்கவாசல் படம்…