
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியானதை அடுத்து அதில் வைரமுத்து பெயர் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்போது கைகூடியுள்ளது. தற்போது தாய்லாந்தில் படக்குழு படப்பிடிப்பு செய்துவரும் நிலையில் நேற்று பொன்னியின் செல்வனின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.
அதில் படத்தில் பணிபுரியும் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் பாடல் என்ற இடத்தில் எந்த பெயரும் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. வழக்கமாக மணிரத்னம் படத்தில் வைரமுத்துதான் பாடல்கள் எழுதுவார். ஆனால் மிடூ பிரச்சனையில் அவர் சிக்கியதால் அவருக்கு பதில் வேறு யாராவது எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வேறு பாடலாசிரியர் பெயரும் இல்லாததால் படத்தில் பாடல்களே இல்லையோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Leave a Reply