ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள லஷ்மி பாம் என்ற இந்தி திரைப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலிஸ் ஆகப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த வெற்றிப்படமான காஞ்சனாவை இப்போது அவர் இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இயக்கி வருகிறார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்ல்ப்படுகிறது.
ஆனால் இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் 125 கோடி ரூபாய்க்கு இந்த படம் விலை பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. லாக்டவுனால் நிறையப் படங்கள் ஓடிடி பிளாட்பார்ம்களில் ரிலிஸ் செய்யப்பட்டு வருவது தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…