சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று டிஸ்கவரி சேனல் தயாரித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தில் நடித்து முடித்துவிட்டு சென்னை திரும்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டதாக வதந்தி கிளம்பியது என்பதும் அந்த வதந்திக்கு சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின் மூலம் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஜினி உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து ’மேன் வெர்சஸ் வைல்ட்’ ஆவணப்பட இயக்குனர் பேர்கிரில்ஸ் அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அடுத்து ரஜினியுடன் இந்த ஆவண படத்திற்காகத்தான் பணிபுரிந்தது மகிழ்ச்சி அடைந்ததாகவும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அதற்காக தான் நன்றி கூறிக்கொள்வதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
ரஜினியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டுள்ளது குறித்து ரஜினி ரசிகர்கள் பலர் கமெண்ட்டுகளை பதிவு செய்ய, இதனையடுத்து சில நிமிடங்களில் அதனை சூப்பர் ஸ்டார் என்று பேர்கிரில்ஸ் திருத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…