சூப்பர்ஸ்டாருக்கு இதெல்லாம் ஜூஜூபி.... வேட்டையனாவது லைகாவைத் தூக்கி விட்டா சரிதான்...
ரஜினிகாந்த் ஒரு முறை பேசும்போது நான் யானை அல்ல குதிரை. விழுந்தா டக்குன்னு எழுந்துடுவேன்னு சொன்னார். அதனால அவரை நம்பிய தயாரிப்பாளர்கள் பலர் நல்ல லாபம் சம்பாதித்துள்ளனர். அந்த வகையில் விரைவில் வெளிவர உள்ள வேட்டையன் வெற்றி பெறுமா? தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் லைகா நிறுவனம் இந்தப் படத்தின் மூலம் மீண்டு எழுமா? வாங்க பார்க்கலாம்.
லைகா நிறுவனம் மீது தொடர்ந்து ஒரு பேச்சு வந்து கொண்டே இருக்கிறது. அவங்க புரொடக்ஷனையே நிறுத்தப் போறாங்க. இந்தத் தொழிலையே நிறுத்திட்டு லண்டனுக்குப் போய் சிம்கார்டு வியாபாரத்தைப் பார்ப்போம் அப்படின்னு முடிவு பண்ணிட்டாங்களாம்.
ஜெயிலர் படத்தை யாராவது நினைச்சிப் பார்த்தாங்களா...? இந்தப் படம் 600 கோடி வசூல் செய்யும்னு. அந்தப் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் நிறைய வந்தது. இந்தப் படம் ஓடாது. பீஸ்ட் மாதிரி ஆகிடப்போகுது. பீஸ்ட் 2 இது. நெல்சன் சொதப்பி இருக்கப் போறாரு. நெல்சனுக்கு டைரக்ஷனே தெரியாது.
ரஜினி போய் ஏடாகூடமா மாட்டிக்கிட்டாரு. அந்தப் படத்துல நடிக்கும்போது இன்வால்மென்டே இல்லாம நடிச்சிக்கிட்டு இருக்காருன்னு தொடர்ந்து விமர்சனங்கள் வந்தது. இதை எல்லாம் தாண்டி மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப்னு எல்லாரையும் கொண்டு வந்ததும் படம் வேற லெவலில் வந்து அதிரடி வெற்றியைத் தந்தது.
இந்த ஒரு சம்பவம் வேட்டையனுக்கு அமைந்தால் என்ன? வேட்டையன் இது மாதிரி அதிரடியான வெற்றியைத் தரலாமே. இது சினிமா தான். என்ன வேணாலும் நடக்கும். அந்த நம்பிக்கை தான் பெரிய விஷயம். அது ரஜினிக்கும் இருக்குது. இன்னொரு நெகடிவ்வான விஷயம் இந்தப் படத்திலும் பேசப்படுகிறது.
டைரக்டர் ஞானவேலுக்கு கமர்ஷியலா ஹிட் கொடுக்கத் தெரியாது. ஆர்ட் படம் தான் எடுப்பாரு. இந்தப் படம் கமர்ஷியல் கதைகளமா இருக்க வாய்ப்பு இல்ல. ஒரு என்கவுண்டர் போலீஸ். கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளான்னு கதை நகருது. ஆர்டிஸ்ட்லாம் வேற மாதிரி இருக்காங்க.
ரஜினிக்கு ஒரு ஆசை. சமூகநீதி பேசுற மாதிரியான படத்துல நடிக்கலாமேன்னு. காலா, கபாலி எல்லாம் பண்ணியாச்சு. லைகா பொன்னியின் செல்வன் மாதிரி படங்களைக் கொடுத்த நிறுவனம். அதனால அந்த நிறுவனத்தை ரஜினியும் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுற மாட்டாரு. வேட்டையன் முக்கியமான படமாக இருக்கும். அந்த நிறுவனத்துக்குக் கைதூக்கி விடும் படமாக இருக்கும். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.