சரத்குமார் உன் அப்பாவா? ராதிகா மகளிடம் அநாகரீக கேள்வி! – மூக்கை உடைத்த ரேயான்!
ராதிகாவின் மகளான ரேயான் சரத்குமார் பற்றிய எழுதிய பதிவில் ரசிகர் ஒருவர் ஆபாசமானக் கேள்வி எழுப்பியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா இணைந்து நடித்துள்ள வானம் கொட்டட்டும் என்ற படம் ரிலீஸாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ராதிகாவின் மகளான ரேயான் சரத்குமாரைப் பற்றி ’உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அப்பா’ என சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதில் கமெண்ட் இட்ட ரசிகர் ஒருவர் ‘அம்மா ஓகே.. அவரை அப்பா சொல்ல உனக்கு வெக்கமா இல்லையா?’ என்று அநாகரீகமாகக் கேள்வி எழுப்பி இருந்தார். ரேயான் ராதிகாவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்தவர் என்பதால் இப்படி அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரேயான் ‘ அப்பாதான்…இப்ப என்ன பண்ண போற?’ என நெத்தியடி கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பின் எந்த கமெண்ட்டும் செய்யாமல் அந்த நபர் தலைமறைவானார்.