சுந்தர் பிச்சையின் சம்பளம் இவ்வளவுதானா ? வியக்க வைக்கும் தகவல் !

368ad73c3361a54920be2059ded121c3

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்திற்கும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்துக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு அவரது திறமையால் படிப்படியாக உயர்ந்து 10 வருடங்களிலேயே அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சுந்தர் பிச்சை தற்போது அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்துக்கு சி இ ஓ வாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உலகளவில் அதிக சம்பளம் பெறும் தனிநபர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

இதனால் அவரது சம்பளம் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்கான அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளம் பெற இருக்கிறார். இவ்வளவுதானா என யோசிக்கிறீர்களா ? அங்குதான் இருக்கிறது சுந்தர் பிச்சையின் புத்தி சாலித்தனம்.

சம்பளம்தான் கம்மி. ஆனால் அவர் கூகுள் நிறுவனத்தில் சுமார் 1700 கோடி ரூபாய் பங்கு தொகையாக வாங்கியுள்ளார். இதற்கு முன்னதாக அவர் இருமுறை இதுபோல அவர் பங்குகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

Related Articles
Next Story
Share it