தனுஷால வந்த பிரச்சனை... தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முக்கிய முடிவு...?
வடிவேலு, கமல், சிம்புன்னு பல நடிகர்களுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இப்படி தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று பிரபல பத்திரிகையாளர் சபையர் ஒரு சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்ப்போமா...
தனுஷூக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் கிடையாது. திடீர்னு நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஓனர்ஸ் இவங்க எல்லாம் சேர்ந்து தீர்மானம் போடுறாங்க. அதாவது பெரிய நடிகர்களோட படங்கள் 8 வாரத்துக்கு மேல தான் ஓடிடியில ரிலீஸ்க்கு கொடுக்கணும்னு சொல்றாங்க. அது நல்ல விஷயம் தான்.
அதே நேரத்துல தனுஷ் படத்துக்கு பூஜை போடணும்னா தயாரிப்பாளர் சங்கத்தை அணுகனும்னு சொல்றாங்க. நடிகர் சங்கத்துல இருந்து எங்களை கலந்து ஆலோசிக்காம அறிக்கைக் கொடுத்ததா சொல்றாங்க.
தயாரிப்பாளர் சங்கத்துல சொல்லக்கூடிய விஷயம் என்னன்னா சில தயாரிப்பாளர்கள் கிட்ட தனுஷ் அட்வான்ஸ் வாங்கிருக்காரு. அந்தப் படங்களை எல்லாம் முடிச்சிக் கொடுக்காம வேற படத்துக்குப் போயிட்டாரு. அதனால அடுத்தடுத்த படங்கள் பண்றப்ப கேளுங்கன்னு சொல்றாங்க. இந்த நடவடிக்கையை தனுஷ் மேல மட்டும் எடுக்கற அவசியம் என்னன்னு தெரியல.
என்ன நடந்துருக்குங்கறது தனுஷூக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மட்டும் தான் தெரியும். இதே மாதிரி நிறைய நடிகர்களுக்கும் நடந்துருக்கு. அதை ஏன் பேசப்படலன்னும் கேள்வி எழுகிறது.
அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்களை நடிகர்கள் முதலாளின்னு தான் கூப்பிடுவாங்க. எம்ஜிஆரே 2 முறை முதல்வரான பின்பும் நாகிரெட்டியை முதலாளின்னு தான் கூப்பிடுவாராம். ஆனால் இன்னைக்கு நிலைமை அப்படி இல்ல.
ரெண்டு படங்கள் ஹிட் கொடுத்ததும் தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் கொடுத்தா அவங்கக் கிட்ட கையைக் கட்டி நிக்க வேண்டியிருக்கு. அதனால தான் பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் ஏவிஎம், சூப்பர் குட் பிலிம்ஸ் எல்லாம் இப்போ படம் எடுக்கறது இல்ல.
ஒட்டுமொத்தமா பார்த்தா இன்னைக்கு சினிமா இன்டஸ்ட்ரியில பிசினஸ் ஆரோக்கியமா இல்ல. ஓடிடி கூட நீ படத்தை முடிச்சிக் கொண்டு வா. நல்லா இருந்தா வாங்கிக்கறேன்னு சொல்றாங்களாம். கோட் படத்துக்குக் கூட இந்தப் பிரச்சனை இருந்தது.
அதனால இப்போ ஓடிடி பிசினஸ் இல்ல. சேட்டிலைட் இல்ல. தியேட்டர்லயும் மூணு நாள் தான். படமும் சரியா எடுக்கறது இல்ல. இதை சரிசெய்யணும்னு தயாரிப்பாளர் சங்கம் பேசியிருக்காங்க. அடுத்தடுத்த கூட்டங்கள் போடப் போறாங்க. தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் சேர்ந்து கூட்டம் போடப்போறாங்க.
அதுல நடிகர்களோட சம்பளத்தைக் குறைக்கணும்னு முக்கிய பிரச்சனையா வச்சிருக்காங்க. ராயன் படம் எல்லாம் பாட்டு நல்லாருக்க. டிரைலர் நல்லாருக்குன்னு போயிட்டாங்க. ஆனா உள்ளே போயி பார்த்தா படம் பெரிசா இல்ல. இதுல தொடர்ந்து பாதிக்கப்படுறது ஆடியன்ஸ் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.