காதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சந்தியா ஒரு கட்டத்தில் சினிமா வாழ்க்கையை விட்டு விலகினார்.
காதல் மற்றும் கூடல் நகரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை சந்தியா மிகப்பெரிய அளவில் குஷ்பு போல பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் 2015 ஆம் ஆண்டு அவர் வெங்கட் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் நாயகன் சஞ்சீவுடன் அவர் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…