இவ்வளவு பெரிய தொகையா? ‘தனுஷ் 40’ படத்தின் ஆச்சரியமான வியாபாரம்

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’சுருளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டாலும் இந்த படத்தின் டைட்டில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த படத்தின் டைட்டில் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக அந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்த படத்தை அட்டகாசமாக புரமோஷன் செய்ய இன்னும் சில நாட்களில் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ மற்றும் அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றதை தனுஷ் 40’ திரைப்படம் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் இந்த தொகையை கேட்டு கோலிவுட் திரையுலகமே ஆச்சரியம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் ஜோடியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram