நடிகையின் தற்கொலைக்கு தந்தைதான் காரணமா? – அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த சேஜால் ஷர்மா(30) ஹிந்தி வெப் சீரியஸ் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த ‘தில் தோஹ் ஹாய் ஜி’ தொலைக்காட்சி தொடர் பாலிவுட்டில் மிகவும் பிரபலான ஒன்றாகும். அவர் கடந்த சனிக்கிழமை தான் தங்கியிருந்த வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவரின் தந்தை ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதோடு, சமீபத்தில் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, சேஜால் ஷர்மா மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். அதோடு, அவர் நடித்து வந்த சீரியல் முடிவுக்கு வந்ததால் வேறு வேலை தேடிக்கொண்டிருந்தார். 

எனவே, இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால்தன் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.  தற்கொலை செய்து கொள்ளும் முன் தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என தன் கையால் அவர் கடிதமும் எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram