பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல் எழுதுகிறாரா இல்லையா என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ரோஜா படத்துக்குப் பிறகு மணிரத்னம் – ஏ ஆர் ரஹ்மான் – வைரமுத்து ஆகியோர் கூட்டணி தமிழ் சினிமா இசை ரசிகர்களிடையே கோலோச்சி வந்தது. மணி ரத்னம் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்தாலும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் பாடல்கள் சோபித்ததில்லை.
இந்நிலையில் இப்போது மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் விவரம் வெளியாகியுள்ள நிலையில் அதில் வைரமுத்து பெயர் இல்லை. இதனால் 27 வருடங்களாக இணைந்து பணியாற்றிய இந்த கூட்டணி உடைந்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
பாடகி சின்மயி வைரமுத்து மீது மீடூ புகார் எழுப்பியதால்தான் அவர் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி மணிரத்னம் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…
கடந்த 10…
தற்போது தமிழ்…
விஜயின் ஜனநாயகன்…