போயி வேற வேல இருந்தா பாருங்கடா?…இதையே தலைப்பா வச்சிருங்க ! இயக்குனரின் ஐடியா!

சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதி சொன்ன போயி வேற இருந்தா பாருங்கடா என்பதைத் தலைப்பாக வைக்க சொல்லியுள்ளார் இயக்குனர் சி எஸ் அமுதன்.

சமீபத்தில் பிகில் பட தயாரிப்பாளர் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன், விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில்  வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். பிகில் பணத்தில் கிடைத்த கருப்பு பணத்தின் மூலம் மதமாற்ற வேலைகள் நடப்பதாகவும் ரெய்ட் என்றும் குறிப்பிட்டு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகள் உலாவின

இதனை தனது டிவிட்டரில் குறிப்பிட்டு நடிகர் விஜய் சேதுபதி பக்கத்தில்,’போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..’. என்று கண்டனத்தைப் பதிவு செய்தார். அவரது இந்த வார்த்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து நக்கலுக்குப் பெயர் போன இயக்குனர் சி எஸ் அமுதன் இந்த வாக்கியத்தைக் குறிப்பிட்டு தயாரிப்பாளர் சஷிகாந்திடம் இதை உடனடியாக தலைப்பாக பதிவு செய்யுங்கள் என சொல்லியுள்ளார். அதற்கு அவரும் ‘கண்டிப்பாக ‘ எனப் பதிலளித்துள்ளார்.

Published by
adminram