பாலிவுட்டில் நெப்போட்டிசம் கோலோச்சுவதாக சொல்லப்படும் நிலையில் தமிழ் சினிமாவில் குரூப்பிசம் இருப்பதாக குற்றச்சாட்டை ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் சுஷாந்தின் தற்கொலை பல விவாதங்களை எழுப்பியுள்ளது. பாலிவுட்டில் இருக்கும் வாரிசு கலைஞர்களின் ஆதிக்கமே புதிதாக வருபவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப்பறிப்பதாகவும், அதன் மூலம் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகிய இருவரும் தங்களையும் இதுபோல சிலர் பணிபுரிய விடாமல் தடுத்ததாகக் கூறியது மீண்டும் விவாதத்தை எழுப்பியது.
இந்நிலையில் தமிழ் மற்றும் பாலிவுட் ஆகிய இரு மொழி படங்களிலும் பணியாற்றி வரும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தன் சமூகவலைதள பக்கத்தில் ’தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு… யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க… யாருங்க நீங்க????…’ என ஒரு டிவீட்டைப் போட்டுள்ளார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vetrivasanth: சின்னத்திரையில்…
அமரன் திரைப்படத்தின்…
அமரன் திரைப்படத்தில்…
VijayTV: தொலைக்காட்சியில்…
எழுத்தாளரும், நடிகருமான…