அதேநேரம், அப்படிப்பட்ட பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்களை ஹேக் செய்வது, முடக்குவது அவ்வப்போது மர்மநபர்கள் தங்களின் கை வரிசையை காட்டி வருவது வாடிக்கையாக வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு கூட நடிகை அனுபமா பரமேஸ்வரன், ஷோபனா, ஊர்வசி ரவ்தெலா உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது. அதன்பின் அந்த கணக்கு தொழில் நுட்ப வல்லுனர்களால் மீட்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை இஷா ரெப்பாவின் சமூகவலைத்தள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இவர் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருப்பவர். தமிழில் ‘ஓய்’ படம் மூலம் அறிமுகமானார். ஜி.வி.பிரகாஷுடன் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…