
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி எனும் நிகழ்ச்சியை கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனை சின்னத்திரை சூப்பர் ஸ்டார் நடிகை ராதிகா தொகுத்து வழங்கி . இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களிடடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் ஒரு கோடி ரூபாய் வரை பரிசு வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த நிகழ்ச்சியை நம்பகத்தன்மையை கெடுக்கும் விதமாக இதில் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் எளிதானதாக இருக்கிறது. சமீபத்தில் கூட இந்த நிகழ்ச்சியில் ராதிகாவின் கணவர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அனைவரையும் வெறுப்பேற்றி உள்ளது.

அந்த கேள்வி என்னவென்றால் நாட்டாமை திரைப்படத்தில் இடம்பெறும் இந்த வசனத்தை நிறைவு செய்க.———- எடுறா வண்டிய ?. அதாவது ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கும் ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளரிடம் தான் நடித்த ஒரு படத்தின் வசனத்தையே கேள்வியாக கேட்பது எந்த அளவுக்கு பார்வையாளர்களை முட்டாளாக நினைக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.