இதுவும் காப்பியா ? மாஸ்டர் செகண்ட் லுக்கை வச்சி செய்யும் நெட்டிசன்கள் !

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் அது ஹோம்லேண்ட் என்ற படத்தின் போஸ்டரின் காப்பி என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று காலை வெளியானது. அதில் கருப்பு உடையில் சிறுவர்கள் பலர் முன்னோக்கி செல்ல திரும்பி பார்க்கும் விஜய் வாயில் கைவைத்து எச்சரிப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. வெளியானதும் பரவலான பாராட்டைப் பெற்ற இந்த போஸ்டர் சிறிது நேரத்திலேயே ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹோம்லேண்ட் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பிதான் இந்த போஸ்டர். ஏற்கனவே வெளியான முதல் லுக் போஸ்டரும் ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram