தோனி சி எஸ் கே அணிக்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என தான் நம்புவதாக சி எஸ் கே அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தோனி மைதானத்துக்குள் விளையாண்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் இனி சர்வதேசப் போட்டிகளில் விளையாட இருக்கும் ஒரே துருப்பு சீட்டு ஐபிஎல் தொடர்தான். அதற்காக சிஎஸ் கே அணி மும்முரமாக பயிறிசியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது 38 வயதாகும் தோனி இந்த ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சிஎஸ்கே அணியின் சீஇஓ காசி விஸ்வநாதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொல்லியுள்ளார். அதில் ‘’இந்த ஆண்டு மட்டும் இல்லை. 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார். ஊடகங்கள் மூலம் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தை நான் தெரிவிக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…