நியாபகம் இருக்கிறதா இந்த பாட்டியை ? இன்று அவர் இல்லை… பிசிசிஐ இரங்கல் !

இந்திய அணியின் மிகப்பெரிய ரசிகையாக இருந்த சாருலதா பாட்டி ஜனவரி தனது 87 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் விளையாடிய போது மைதானத்தில் உற்சாகமாக இந்திய அணியினரை உற்சாகப்படுத்தி கவனம் ஈர்த்தவர் சாருலதா பாட்டி. 87 வயதான இவர் விராட் கோலியை சந்திக்க ஆசைப்பட போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

அதன் பின் அனைத்துப் போட்டிகளுக்கும் அவருக்கு டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்தார் கோலி. ஜனவரி 13ஆம் தேதி மூதாட்டி சாருலதா, வயது மூப்பு காரணமாக காலமானார்.இதையடுத்து பிசிசிஐ ’இந்தியாவின் சூப்பர் ரசிகையான சாருலதா பாட்டி என்றும் நம் நினைவில் இருப்பார்’ என இரங்கல் தெரிவித்துள்ளது.

Published by
adminram