இவர்தான் சிம்புவின் வருங்கால மனைவியா? வைரலாகும் புகைப்படம்

சிம்புவுக்கு அவரது பெற்றோர் கடந்த சில மாதங்களாக பெண் பார்த்து வருகின்றனர் என்பதும் உறவினர்களில் பல பெண்களை பார்த்து திருப்தி இல்லாததால் தற்போது வெளியில் பெண் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் சிம்புவுக்கு பொருத்தமான ஒரு பெண்ணை இந்த ஆண்டுக்குள் பார்த்து அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிம்புவுடன் ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பெண்தான் சிம்பு திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணா? என்ற வதந்தியும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர் 

ஆனால் இவர் ஓவியா நடித்த ’90 எம்எல்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீ கோபிகா என்றும் சிம்புவை தற்செயலாக அவர் சந்தித்த போது எடுத்த இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றபடி இந்த பெண்ணை சிம்பு திருமணம் செய்ய போகிறார் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது

Published by
adminram