இதுதான் ‘மாஸ்டர்’ விஜய்சேதுபதி கெட்டப்பா? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய்சேதுபதியின் கெட்டப் குறித்த ஒரு அட்டகாசமான போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக்கில் விஜய் சேதுபதி கெட்டப் வெளியாகி உள்ள நிலையில் அதற்கு முற்றிலும் வித்தியாசமாக இந்த லுக் இருப்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்

இருப்பினும் இது அதிகாரப்பூர்வமான மாஸ்டர் படத்தின் போஸ்டர் அல்ல என்றும் ரசிகர் ஒருவர் ஆர்வக்கோளாறில் டிசைன் செய்த போஸ்டர் என்றும் தெரியவருகிறது. ஒருவேளை இப்படி ஒரு கெட்டப் உண்மையிலேயே விஜய் சேதுபதிக்கு இருந்தால் விஜய் ரசிகர்கள் மிரண்டு விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய்க்கு சரிசமமான கேரக்டர் விஜய்சேதுபதி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒரு மாஸ் நடிகர் திரைப்படத்தில் மாஸ் வில்லன் இருந்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று ஏற்கனவே பல முன்னுதாரணங்கள் இருந்து வரும் நிலையில் இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் அதில் விஜய்சேதுபதியின் பங்கு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவதும் விஜய் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது 

Published by
adminram